Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றவர்கள் நெகிழ்ச்சி

தேனி: தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 60 வயதை கடந்த 59 பேர், ஹிந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகள் உள்ள கோயில்களுக்கு இலவசமாக சென்று திரும்பியவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

முருகன் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய கோயில்களுக்கு தமிழக அரசின் ஹந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், மூத்த குடிமக்களை (60 வயதிற்கு மேல்) இலவசமாக அழைத்துச்செல்லும் திட்டம் உள்ளது.

இத்திட்டத்தில் திண்டுக்கல் ஹிந்து அறநிலையத்துறைகோட்டத்தில் 59 பேர் அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இலவச அறுவடை வீடுகளில் ஆன்மிக சுற்றுலாமுடிந்து வீடு திரும்பினர்.அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், தேனி மாவட்டத்தில் 24 பேர், திண்டுக்கல்லில் 35பேர்விண்ணப்பித்து இருந்தனர்

இவர்கள் வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். 4 நாட்கள் பயணம் செய்யக்கூடிய உடல்திறன் இருக்க வேண்டும், என்றனர்.

இலவச ஆன்மிக சுற்றுலாவிற்கு சென்று திரும்பிய சின்னமனுார்கீழபூலானந்தபுரம் முதல் தெரு பழனிச்சாமி கூறியதாவது: இந்த பயணத்தில்சிறப்பு தரிசனம், மூன்று வேளை உணவு வழங்கினர்.

அந்த கோயில்களின் அறநிலையத்துறை அதிகாரிகள் கூடுதல் தகவல்கள் தெரிவித்தனர். சுவாமியின் சிறப்பு தரிசனமும் செய்தோம், என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *