கிறிஸ்துமஸ் பண்டிகையில் கோயில் திருவிழா நடத்தும் வினோதம்
மூணாறு: மூணாறில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது தொழிலாளர்கள் கோயில்களில் திருவிழாக்கள் நடத்தும் வினோதம் தொடர்ந்து வருகிறது.
மூணாறை சுற்றியுள்ள தேயிலை தோட்டங்களில் தமிழர்கள் தொழிலாளர்களாக பல தலைமுறை வேலை செய்து வருகின்றனர்.
அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கோயில்களில் திருவிழாக்கள் நடத்தும் வினோதம் தொடர்ந்து வருகிறது.
அதனை ஆங்கிலேயர் காலம் முதல் ஒரு நூற்றாண்டுக்கு மேல் தவறாமல் கடை பிடித்து வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து நையாண்டி மேளம், கரகாட்டம், ஆடல், பாடல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை வரவழைத்து சிறப்புடன் திருவிழாக்கள் நடத்தப்படும். அது போன்று எஸ்டேட் பகுதிகளில் வழக்க மான உற்சாகத்துடன் திருவிழாக்கள் நேற்று துவங்கின.
நேர்த்திக்கடன்: மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் கன்னியம்மன் கோயில் திருவிழா நேற்று துவங்கியது.
முளைப்பாரி எடுத்தும், தீ மிதித்தும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.
திருவிழா இன்று நிறைவு பெறுகிறது.