Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் அ.தி.மு.க.,சார்பில் எம்.ஜி.ஆரின் 37வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

ஆண்டிபட்டி வைகை ரோடு சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் முன்னாள் எம்.எல்.ஏ., தவசி, நகர் செயலாளர் அருண்மதி கணேசன் ஆகியோர் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எம்.ஜி.ஆர்., படிப்பகம் மற்றும் நாடார் தெருவில் எம்.ஜி.ஆர்., நினைவகம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஆண்டிபட்டி பேரூராட்சி முன்னாள் சேர்மன் சேட்டு அருணாசலம், பேரூராட்சி கவுன்சிலர் பாலமுருகன், ஒன்றிய கவுன்சிலர் சுமதி, மாவட்ட பிரதிநிதி கவிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போடியில் அமைப்பு சாரா அணியின் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் குறிஞ்சி மணி தலைமையில் எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஒன்றிய நிர்வாகிகள் ராஜ்குமார், குரு ஞானதேசிகன், ராஜாங்கம், மாயி, மாரியப்பன், கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பெரியகுளம்: பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., படத்திற்கு அவரது நினைவு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் அன்னபிரகாஷ், ராஜகுரு முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் முத்துலட்சுமி, நகர துணை செயலாளர் வெங்கடேஷ் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பெரியகுளம் முன்னாள் எம்.பி., ரவீந்திரநாத் அலுவலகம் முன்பு எம்.ஜி.ஆர்., படத்திற்கு, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு அணியினர் ஒன்றிய செயலாளர்கள் செல்லமுத்து, ஆண்டி தலைமை மாலை அணிவித்தனர்.

மாநில அமைப்பு செயலாளர் மஞ்சுளா, பொன்ரெங்கராஜ், சிவக்குமார்,அன்பு, ராஜகோபால், ரெங்கராஜ், ஜெயப்பிரகாஷ், ராஜசேகர் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். தேவதானப்பட்டி, தாமரைக்குளம், வடுகபட்டி உட்பட ஒன்றிய பகுதிகளில் எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *