கம்பத்தில் குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிய தாய்
கம்பம் : கம்பத்தில் கம்பமெட்டு காலனியில் வசிக்கும் திருமணமான பெண் ஒருவர் ஓராண்டிற்கு முன் தகராறு காரணமாக கணவரை விட்டு பிரிந்து சென்றார்.
இவர்களுக்கு ஆண், பெண் இரு குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் உத்தமபாளையம் மகளிர் போலீசில் அந்த பெண் அளித்த புகாரில் கணவர் உள்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று கம்பமெட்டு காலனியில் மாமனார் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்ற அந்த பெண் வீட்டிற்குள் சென்று தகராறு செய்துள்ளார்.
பின் வீட்டிற்கு வெளியில் வந்து தனது குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயற்சி செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது