பஸ்களில் ‘சேப்கார்டுகள்’ விபத்தில் உயிரிழப்புகளை தடுக்க மாவட்டத்தில் 140 பஸ்களில் பொருத்தம்
தேனி: பஸ் டூவீலர் மோதல் விபத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி டூவீலர் ஓட்டிகள் உயிரிழப்பதை தடுக்க டவுன்பஸ்களில் ‘சேப்கார்டுகள்’ பொருத்தப்பட்டு வருவதாக போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் இயக்கப்படும் பல்வேறு டவுன் பஸ்களில் முன், பின் சக்கரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சிவப்பு நிற தடிமனான பிளாஸ்டிக் பை போன்ற அமைப்பு பொருத்தப்பட்டிருந்தது. இதற்கு பின்பகுதியில் பஸ்சுடன் இணைக்கப்பட்ட இரும்பு கார்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதுபற்றி அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது, பஸ்களை டூவீலரில் செல்வோர் முந்தி செல்ல முயலும் போது, பஸ்சின் பக்கவாட்டில் விழுந்து பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
இதனை தடுக்க முதற்கட்டமாக சென்னை மாநகர பேருந்துகளில் கடினமான ரப்பர் ஆல் தயாரான ‘சேப்கார்டுகள்’ பொருத்தப்பட்டன.
இவை பொருத்திய பின் விபத்துக்கள் ஏற்பட்டாலும் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படவில்லை. இதனால் மாநிலத்தில் இயக்கப்படும் அனைத்து டவுன் பஸ்களிலும் சேப்கார்டு பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் 140 பஸ்களில் ‘சேப்கார்டுகள்’ பொருத்தப்படுகிறது. என்றார்