ஹைவேவிஸ் பேரூராட்சியில் வருமுன் காப்போம் முகாம்
கம்பம்,: கம்பம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஹைவேவிஸ் பேரூராட்சி அலுவலகத்தில் வருமுன் காப்போம் மருத்துவமுகாம் நடைபெற்றது. துணை இயக்குநர் அலுவலக அதிகாரி முருகேசன் தலைமை வகித்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் முருகன் தலைமையில் டாக்டர்கள் கார்த்திக், வின்ஸ்டன், சுதா, முருகானந்தன், பல் டாக்டர் கணநாதன், பிசியோதெரபிஸ்ட் பூர்ணிமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிகிச்சையளித்தனர்.
கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் , ரத்த அழுத்தம், சர்க்கரை, பல் மருத்துவம் பார்க்கப்பட்டது.
சித்தா பிரிவு சார்பில் டாக்டர் சிராசுதீன் தலைமையிலான குழுவினர் பொதுமக்களை பரிசோதித்து ஆடாதொடை சூரணம், நிலவேம்பு, கபசுர குடிநீர் பொடி, வலி நிவாரண தைலங்கள், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் லேகியம் உள்ளிட்ட சித்த மருந்துகளை வழங்கினார்கள். தோட்ட தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார மேற்பார்வையாளர்கள் பழனி குமாரசாமி, ஆய்வாளர்கள் பாபு ராஜா, பிரபு ராஜா செய்திருந்தனர்.