பாசனக் கால்வாயில் விபத்து அபாயம்
ஆண்டிபட்டி: நடுக்கோட்டை – ஏ.வாடிப்பட்டி ரோட்டில் வைகை அணை பாசனக்கால்வாயில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு தடுப்புகள் சேதமானதால் விபத்து அபாயம் தொடர்கிறது
வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு செல்லும் பாசனக்கால்வாய், நடுக்கோட்டை – ஏ.வாடிப்பட்டி செல்லும் ரோட்டின் குறுக்காக செல்கிறது. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள், பொதுமக்கள் இந்த பாலத்தை கடந்து செல்கின்றனர்.
மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளும் இந்த பாலம் வழியாக தினமும் செல்வது தொடர்கிறது. இந்நிலையில் பாலத்தில் இருபுறமும் அமைக்கப்பட்ட பாதுகாப்பு தடுப்புகள் சேதம் அடைந்துள்ளன. தற்போது கால்வாயில் அதிகப்படியான நீர் செல்கிறது. பாலத்தில் பாதுகாப்பு தடுப்பு அமைக்க நீர் பாசனத்துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.