ஒரு தலை , 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி
தேனி: தேனி மாவட்டம், தப்புக்குண்டுவில் அரசு கால்நடை மருத்துக்கல்லுாரி, ஆராய்ச்சி நிலையம் செயல்படுகிறது. கல்லுாரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வெங்கடாசலபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் செம்மறி ஆடு கன்று ஈனுவதில் சிரமம் உள்ளதாக தகவல் தெரிவித்தனர். ஆட்டிற்கு எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆட்டுக்குட்டியின் நெஞ்சுப்பகுதி ஒன்றுடன் ஒன்று ஒட்டி யிருப்பது தெரிந்தது. பின்னர் மருத்துவக்குழுவினர் ஒருதலை, இரு உடல், 8 கால்களுடன் காணப்பட்ட குட்டியை இறந்த நிலையில் வெளியெடுத்தனர்.
தாய் ஆடு சிகிச்சையால் காப்பாற்றப்பட்டது. சுற்றுச்சூழல் மாசுபாடு, மரபணுகோளாறு காரணமாக இவ்வாறான ஆட்டுக்குட்டி உருவாகி இருக்கலாம் என கால்நடை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.