முதல்வர் பதவி ஏற்பு
தேனி : தேனி கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் புதிய முதல்வராக டாக்டர் கு.பொன்னுதுரை 54, பதவி ஏற்றார்.
இவர் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் ஒட்டுண்ணியல் துறை தலைவர், பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவி பேராசிரியராக கடந்த 28 ஆண்டுகளாக பணிபுரிந்தார். முதன்மை மற்றம் துணை ஆராய்ச்சியாளராக இருந்துள்ளார். ஆராய்ச்சி சம்பந்தமாக கிளாஸ்கோ பல்கலை, ஸ்காட்லேண்ட்ஸ் பல்கலை, பயிற்சி பெற்றுள்ளார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலையின் சிறந்த பேராசிரியர் விருதும் பெற்றுள்ளார்.
பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகள், புத்தகங்களை எழுதியுள்ளார். புதிதாக பதவி ஏற்ற முதல்வரை பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் பாராட்டினர். இங்கு பணியாற்றிய ரிச்சர்டு ஜெகதீசன், புதுக்கோட்டை கால்நடை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது