என். எஸ். எஸ்., முகாம் நிறைவு
தேனி : தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற என்.எஸ்.எஸ்., முகாம் டிச.23ல் துவங்கியது.
முகாமில் தினமும் மாணவர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், போதைப் பொருள் ஒழிப்பு, சைபர் குற்றங்களை தடுத்தல் உள்ளிட்டவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். என்.எஸ்.எஸ்., முகாம் நேற்று நிறைவடைந்தது. முகாமை பள்ளி திட்ட அலுவலர் இளங்கோவன் ஒருங்கிணைத்திருந்தார்