சத்துணவு மையங்களுக்கு புதிய காஸ் அடுப்புகள்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு சத்துணவு மையங்களில் விறகு அடுப்பு சமையலுக்கு பயன்படுத்தப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்ப்பதற்காக அனைத்து சத்துணவு மையங்களிலும் காஸ் அடுப்பாக மாற்றம் செய்யப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த காஸ் அடுப்புகள் சில மையங்களில் சேதம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து மாற்று அடுப்பு வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய சத்துணவு திட்ட அதிகாரிகள் கூறியதாவது: ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 131 சத்துணவு மையங்கள் செயல்படுகின்றன. அரசு மூலம் தற்போது 60 புதிய அடுப்புகள் கிடைத்துள்ளது. சேதமடைந்த அடுப்புகளை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.