Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

போடி மாணவர்கள் தென் தமிழக வலு துாக்கும் போட்டி முதலிடம்

போடி: தென் தமிழக அளவில் நடந்த வலு தூக்கும் போட்டியில் போடி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்ட வலு தூக்கும் சங்கங்கள் சார்பில் தென் தமிழக அளவிலான வலு தூக்கும் போட்டி பாளையங்கோட்டையில் நடந்தது. 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் போடி நீலமேகம் பிள்ளை அகடாமி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

பெண்களுக்கான சப் ஜூனியர் 66 கிலோ எடை பிரிவில் சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி துர்க்கை வேணி முதலிடமும், ஸ்ட்ராங் விமன் பட்டமும் பெற்றார். பாண்டி மீனா 2 ம் இடம் பெற்றுள்ளார். 74 கிலோ எடை பிரிவில் போடி பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி விஷாலிமுதலிடம் பெற்றார். 84 கிலோ எடை பிரிவில் போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவி தங்கேஸ்வரி முதலிடம் பெற்றுள்ளார்.

பெண்களுக்கான சீனியர் 95 கிலோ எடை பிரிவில் கற்பக பிரபா 3 ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஆண்கள் பிரிவு

ஆண்களுக்கான 53 கிலோ எடை பிரிவில் தேனி மேரி மாதா மெட்ரிக் பள்ளி மாணவர் யாதீஷ் குமார், போடி சிசம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கோபிநாத், கோகுல் பாலன், ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜீவா ஹரிஹரன் சிறந்த குட் லிப்டராக தகுதி பெற்று உள்ளனர்.

59 கிலோ எடை பிரிவில் தேனி வேலம்மாள் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர் ஜெய்தீப், போடி சவுடாம்பிகா நடுநிலைப்பள்ளி மாணவர் கவிபாரதி, 63 கிலோ எடை பிரிவில் போடி ஜ.கா.நி., மேல்நிலைப் பள்ளி மாணவர் ரோகித் குமார், 66 கிலோ எடை பிரிவில் அருண்பாண்டியன், 79 கிலோ எடை பிரிவில் போடியை சேர்ந்த பாலா கார்த்திக், 84 கிலோ எடை பிரிவில் போடி 7வது வார்டு நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் நாவலன் குட் லிப்டராக தகுதி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் உடன் சென்ற மாஸ்டர் மோனிஸ்வரை, மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் குமார்,

செயலாளர் நீலமேகம், மாஸ்டர்கள் சொக்கர்மீனா, தீபன் சக்கரவர்த்தி, வாஞ்சிநாதன், நவநீதன் பெஸ்கி ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *