புதிய கம்பங்கள் அமைக்க இழுத்தடிக்கும் மின்வாரியம்
தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சி 5வது வார்டு கிணற்றுத் தெரு, மச்சால் தெரு, பாண்டியன் நகர், ஓம்சக்தி கோயில் தெரு ஆகிய தெருக்களில் 5 புதிய மின்கம்பங்கள் அமைத்து, மின் வினியோகம் சீரமைக்க வேண்டும், என மக்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.
2023 டிச. ல் அ.தி.மு.க., கவுன்சிலர் கிருஷ்ணபிரபா, மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாமில் மின் கம்பம் அமைக்க கோரி மனு வழங்கினர். அம்மனு பரிசீலிக்கப்பட்டு, தேனி நகராட்சி மின்வாரியத்திற்கு இடத்தை அளவீடு செய்ய ரூ.6905 நகராட்சி செலுத்தியது.
அதன் பின்பும் மின்கம்பங்களை அமைக்கவில்லை. மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாமில் வழங்கி ஓராண்டு காலம் இழுத்தடிக்கப்படுகிறது. கலெக்டர் நடவடிக்கை எடுக்க கவுன்சிலர் கோரியுள்ளார்.