வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
போடி: போடியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
போடியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா போடி நாயுடு நாயக்கர் மத்திய சங்கத் தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது. மத்திய சங்க கவுரவ தலைவர் குமரன், துணைத் தலைவர்கள் பொன் கலைச்செல்வன், பாண்டி, செயலாளர் சுருளிராஜ், பொருளாளர் மணிகண்டன், துணை செயலாளர் பிச்சைமணி, துணை பொருளாளர் வீரகண்ணன் முன்னிலை வகித்தனர். பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் பெரியாண்டவர் கோயிலில் துவங்கி காமராஜர் பஜார் வழியாக கட்டபொம்மன் சிலைக்கு சென்றது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். ஓ.பி.எஸ்., அணி மாவட்ட செயலாளர் சையதுகான், நகர செயலாளர் பழனிராஜ், அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன், நகர செயலாளர்கள் சேதுராம், மாரியப்பன், பொதுக்குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், தி.மு.க., நகர செயலாளர் புருஷோத்தமன், பா.ஜ., மாவட்ட செயலாளர் தண்டபாணி, நகரத் தலைவர் சித்ராதேவி, கவுன்சிலர் மணிகண்டன், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் முத்துச்சாமி, நகர செயலாளர் ஞானவேல் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி மாலைக்கோயில் வளாகம் முன் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பில்,வீரபாண்டிய கட்டபொம்மனின் 266வது பிறந்த நாள் விழா நடந்தது. மாவட்டச் செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் தன்ராஜ் பாண்டியன், மாவட்டத் தலைவர் லட்சுமணன், பொருளாளர் பவுன் கதிர்வேல்சாமி, நிர்வாகிகள் கட்டபொம்மன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் பாண்டியன், ஒன்றியச் செயலாளர் ராஜாராம், நகரச் செயலாளர் சரவணன், அ.தி.மு.க., மேற்கு ஒன்றியச் செயலாளர் லோகிராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் உட்பட பல்வேறு கட்சிகள், சமுதாய நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.