பெரியாறு அணைக்கு மேல் பறந்த ஹெலிகாப்டரால் பீதி
கூடலுார்: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை, தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ளது.
பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் அமைந்துள்ள இந்த அணை முழு பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளது.
அணை பராமரிப்பு விஷயத்தில் தமிழகம் மற்றும் கேரள அதிகாரிகளிடையே பிரச்னை நிலவி வருகிறது.
இந்நிலையில், பெரியாறு அணைக்கு மேல் நேற்று மதியம் தனியார் ஹெலிகாப்டர் பறந்தது.
அணையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
தொடர்ந்து கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரியாறு புலிகள் காப்பகத்தில் எவ்வித அனுமதியும் இன்றி ஹெலிகாப்டர் பறந்ததால் கேரள வனத்துறையினரும் விசாரணையை துவக்க உள்ளனர்.