ரூ.2 கோடியில் சக்கம்மாபட்டியில் புதிய பாலம்
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் சக்கம்மாபட்டியில் நாகலாறு ஓடையின் குறுக்கே ரூ.2 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை வேலப்பர் கோயில் மலைப்பகுதியில் பெய்யும் மழையால் நாகலாறு ஓடையில் வரும் நீர் தெப்பம்பட்டி, சுந்தர்ராஜபுரம், சக்கம்மாபட்டி, கதிர்நரசிங்கபுரம், கொத்தப்பட்டி வழியாக கோத்தலூத்து அதிகாரி கண்மாய்க்குச் செல்லும். சக்கமாபட்டி வழியாக செல்லும் ஓடையின் குறுக்கே கதிர்நரசிங்கபுரம் – பாலக்கோம்பை ரோடு செல்கிறது. சக்கம்மாபட்டியில் இருந்த தரைப்பாலத்தில் மழைக்காலத்தில் நீர் வரத்து ஏற்படும்போது வாகனங்கள் கடந்து செல்ல முடியாது. மழை நீர் வடிந்த பின்பு கடந்து சென்றதால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு இப்பகுதியின் சக்கம்மாபட்டியில் பெரிய பாலம் அமைக்க வலியுறுத்தி வந்தனர். இப்பிரச்னை குறித்த தினமலர் தொடர்ந்து வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. டிசம்பர் இறுதிக்குள் பாலம் கட்டுமான பணி முழுமையாக முடிந்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.