11.38 லட்சம் பேர் மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண்களை விட 26 ஆயிரம் பெண்கள் அதிகம்
தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியிலில் மாவட்டத்தில் 11.38 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆண்களை விட 26 ஆயிரம் பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.
மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைகைய அடிப்படையாக கொண்டு 2024 அக்.,29ல் வரைவு வாக்களர்பட்டியில் வெளியிடப்பட்டது. அதில் ஆண்கள் 5.49 லட்சம், பெண்கள் 5.74 லட்சம், மூன்றாம் பாலினத்தவர்கள் 207 பேர் என மொத்தம் 11.24 லட்சம் பேர் இடம் பெற்றிருநத்தனர். இதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடந்தது. இதற்காக ஓட்டுச்சாவடி மையங்கள், ஆன்லைன் மூலம் மனுக்கள் பெறப்பட்டன. இதில் பெயர் சேர்க்க 20,729, நீக்குவதற்கு 6325, முகவரி, புகைப்படம் மாற்றம் செய்ய 7219, வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் 3 என மொத்தம் 34,276 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களில் புதிதாக சேர்க்க 20,396, நீக்குவதற்கு 6110 என மொத்தம் 33,012 மனுக்கள் ஏற்கப்பட்டன. மீதமுள்ள 1264 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டார். பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., தாட்சாயினி பெற்றுக்கொண்டனர்.
இறுதி வாக்காளர்பட்டியலில் ஆண்கள் 5.56 லட்சம், பெண்கள் 5.82 லட்சம், மூன்றாம் பாலினத்தவர்கள் 205 பேர் என மொத்தம் 11.38 லட்சம் பேர் இடம் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக பெரியகுளம்(தனி) தொகுதியில் 2.92லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், தேர்தல் ஆணைய செயலி, தேர்தல் ஆணைய இணையதளத்தில் விண்ணபிக்கலாம். இந்த வாக்காளர் பட்டியல் பார்வையிட, ஓட்டுச்சாவடி மையம், வாக்காளர் பதிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் பார்வையிட்டு, தங்கள் பெயரை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் அபிதாஹனீப், தாசில்தார்கள், அரசியல் அ.தி.மு.க.,வை சேர்ந்த ஜீவானந்தம், தி.மு.க.,வை சேர்ந்த ஆசைத்தம்பி, காங்., அபுதாகீர், மார்க்சிஸ் கம்யூ., கண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தொகுதி/ ஆண்கள்/ பெண்கள்/ மூன்றாம்பாலினத்தவர்/ மொத்தம்/ஆண்டிபட்டி/1,38,081/1,42,852/35/2,80,298/பெரியகுளம்/ 1,43,125/1,49,181/123/2,92,429/போடி/ 1,35,837/1,43,192/19/2,79,048/கம்பம்/1,39,075/1,47,051/28/2,86,154/மொத்தம்/5,56,118/5,82,276/205/11,38,599/