மாநில கலைத் திருவிழாவில் 7 போட்டிகளில் தேனி முதலிடம்
தேனி : மாநில அளவில் நடந்த கலைத்திருவிழாவில் 7 போட்டிகளில் தேனி மாணவர்கள் முதலிடம் வென்றனர்.
அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளிகளிகளில் முதலாம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை படிக்கும் மாணவர்கள் நான்கு பிரிவுகளாக பிரித்து போட்டிகள் நடந்தது. மாவட்ட அளவில் முதலிடம் வென்ற 346 மாணவர்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் நடந்த மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றனர்.
திருக்குறள் ஒப்புவித்தல், நாட்டுப்புற நடனம், தனிநபர் நடிப்பு, வீதிநாடகம், மணல் சிற்பம் போட்டியில் இரு பிரிவில் முதலிடம், களிமண் சிற்பம் செய்தல் என 7 போட்டிகளில் முதலிடம் வென்றனர். கிராமிய நடனம், பறை இசைத்தல், காகிதக்கூழ் பொருட்கள் தயாரித்தல், களிமண் சிற்பம் செய்தல் போட்டியில் இரு பிரிவு என 5 போட்டிகளில் 2ம் இடம் வென்றனர். மறு வேடப்போட்டி, நகைச்சுவை கூறுதல், நாட்டுப்புற நடனம் ஆகிய போட்டிகளில் 3ம் இடம் பிடித்தனர். முதலிடம் வென்ற 22 மாணவர்களுக்கு சென்னையில் நடக்கும் விழாவில் கலையரசன் என்ற பட்டம் வழங்கப்பட உள்ளது.