தமிழக கவர்னரை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
தேனி : தமிழக சட்டசபையில் தேசிய கீதம் பாடப்படாததை கண்டித்து, உரை நிகழ்த்தாமல் வெளியேறிய கவர்னர் ஆர்.என். ரவி, அ.தி.மு.க., பா.ஜ.,வை கண்டித்து தேனி, வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டச் செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் கண்ணன்,தேனி நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா, துணைத் தலைவர் செல்வம், தேனி தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்னசபாபதி,போடி மேற்கு ஒன்றிய செயலாளர் லட்சுமணன், போடி நகரச் செயலாளர் புருஷோத்தமன், பெரியகுளம் வடக்கு ஒன்றியச் செயலாளர் பாண்டியன், மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகரச் செயலாளர் நாராயண பாண்டியன் நன்றி தெரிவித்தார்.
சின்னமனூர்: தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட அவைத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில், ஈஸ்வரி, மலைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர் அய்யம்மாள் , நகர் செயலாளர் முத்துக்குமார் வரவேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கொள்கை பரப்பு துணை செயலாளர் பாண்டியன், தீர்மான குழு இணை செயலாளர் ஜெயக்குமார், விளையாட்டு மேம்பாட்டு அணி வசந்தன், முன்னாள் நகர் செயலாளர் மயில்வாகனன், கம்பம் நகர் செயலாளர்கள் வீரபாண்டியன், பால்பாண்டி ராஜா, அயலக அணி செயலாளர் எல்.ரவி, கம்பம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.