வெள்ளாடு வளர்ப்பு, கறவை மாடு பண்ணை பயிற்சிக்கு அழைப்பு
தேனி: தேனி கால்நடை மருத்துவ அறிவியல் கல்லுாரி,ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில், சுய வேலை வாய்ப்பு பயிற்சியாக 15 நாட்கள், ரூ.3 ஆயிரம் கட்டணத்தில் நாட்டுக்கோழி, வெள்ளாடு வளர்ப்பு, கறவை மாட்டு பண்ணையம் துவக்க பயிற்சி வழங்கப்படுகிறது.
இதில் சேர்ந்து பயன் பெற விரும்பும் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், பாஸ்போர்ட் புகைப்படம் 2, ஆதார், வாக்காளர் அட்டை நகல்கள், கல்வி, ஜாதி சான்றிதழ்கள் இணைத்து ஜன.,31 மாலை 5:00 மணிக்குள் தலைவர், கால்நடை விரிவாக்கக் கல்வித்துறை, கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தப்புக்குண்டு, தேனி. என்ற முகவரிக்கு பதிவுத்தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு ‘86674 28982’ என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கல்லுாரி முதல்வர் டாக்டர் பொன்னுத்துரை தெரிவித்துள்ளார்.