4.27 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பொருட்கள் வினியோகம்
தேனி: மாவட்டத்தில் 4.27 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு பொருட்கள் வினியோகம் துவங்கியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி பெறும் ரேஷன் கார்டுதார்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சீனி, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பொங்கல் பொருட்கள் தொகுப்பு வழங்கும் விழா தேனி கூட்டுறவு மொத்த விற்பனை சங்க விழாவில் கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். எம்.பி., தங்கதமிழ் செல்வன் முன்னிலை வகித்தார்.
டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிச்செல்வி, தேனி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா, நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் செந்தில்குமார் பங்கேற்றனர். மாவட்டத்தில் 4.27 லட்சம் ரேஷன் கார்டு தாரர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
இதில் கரும்பு கொள் முதல் செய்ய ரூ.1.49 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு அரசு ரொக்கத் தொகை ஏதும் அறிவிக்கவில்லை.
இதனால் பல ரேஷன் கடைகளில் கூட்டமின்றி காணப்பட்டது. ஜன.,13வரை இலவச பொருட்கள் வழங்கப்பட உள்ளது.