கிராவல் மண் கடத்தல்: 2 டிப்பர் லாரி பறிமுதல்
போடி: போடி அருகே ராசிங்காபுரம் மெயின் ரோட்டில் கனிம வளத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன், தனி வருவாய் அலுவலர் கூடலிங்கம் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த ரோட்டின் வழியாக வந்த 2 டிப்பர் லாரிகளில் கிராவல் மண், கற்கள் ஏற்றி கொண்டு கேரளா செல்வது தெரிந்தது.
லாரியை நிறுத்தி இருவரிடமும் உதவி இயக்குனர் அனுமதி சீட்டு கேட்டுள்ளார். அனுமதி சீட்டு இல்லை என தெரிந்ததும், லாரியை அதே இடத்தில் நிறுத்தி விட்டு டிரைவர்கள் இருவரும் தப்பி ஓடி விட்டனர். கற்களுடன் கூடிய 2 டிப்பர் லாரியை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தார். உதவி இயக்குனர் கிருஷ்ண மோகன் புகாரில் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.