Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

‘ஹெல்மெட்’ அணிந்து வாகனம் இயக்கியவர்களுக்கு மரக்கன்று.

போடி : போடியில் போக்குவரத்து போலீசார் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு டவுன் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் நடந்தது. போக்குவரத்து எஸ்.ஐ., தட்சணாமூர்த்தி முன்னிலை வகித்தார்

டூவீலர்களை ஓட்டிச் செல்லும் போது, ‘ஹெல்மெட்’ அணிவதன் அவசியம் குறித்தும், போக்குவரத்து விதி முறைகளை பின்பற்றி ஆட்டோ டிரைவர்கள், மக்கள் நடந்து கொள்வது பற்றிய விழிப்புணர்வு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. விதி முறைகளை பின்பற்றிய ஆட்டோ டிரைவர்கள், டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர்களை பாராட்டி தென்னை, பாதாம் உள்ளிட்ட மரக்கன்றுகள், இனிப்புகள் வழங்கப்பட்டன. போக்குவரத்து போலீசார், விதைகள் மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனர் பாண்டிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *