ஓட்டல்களில் காய்ச்சிய நீர் வழங்க வலியுறுத்தல்
கூடலுார் : பொது மக்களுக்கு சளி, காய்ச்சல் அதிகரித்து வருவதால் ஓட்டல்களில் காய்ச்சிய குடிநீர் வழங்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களாக பனி அதிகரிப்பால் ஏராளமான பொது மக்கள் வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிகிச்சைக்கு வருபவர்களை காய்ச்சிய நீரை குடிக்க டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆனால் கூடலுாரில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் காய்ச்சிய நீர் வழங்குவது இல்லை. ஒரு சில ஓட்டல்களில் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கி வருகின்றனர். மற்ற அனைத்து ஓட்டல்களிலும் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மேலும் பலருக்கு வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. அனைத்து ஓட்டல்களிலும் காய்ச்சிய நீர் வழங்க கூடலுார் நகராட்சி சுகாதாரத் துறையினர் அறிவுறுத்த வேண்டும் என, பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.