மாநில வாலிபால் போட்டி: முதலிடம் பிடிக்க இரு அணிகள் முனைப்பு
பெரியகுளம்: மாநில வாலிபால் போட்டியில் முதல் பரிசு, கோப்பையை பெறுவதற்கு லயோலா கல்லூரி அணி, போலீஸ் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
பெரியகுளம் அருகே வடுகப்பட்டியில் மாநில வாலிபால் போட்டி நடந்து வருகிறது. போட்டிக்கு வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன் தலைமை வகித்தார். டி.எஸ்.பி., நல்லு துவக்கி வைத்தார்.
சென்னை தமிழ்நாடு போலீஸ் அணி, லயோலா கல்லூரி அணி, எஸ்.டி.ஏ.டி., கல்லூரி அணி, பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரி அணி, கோவை கற்பகம் பல்கலை அணி ஆகிய 6 அணிகள் விளையாடுகிறது. லீக் சுற்று போட்டிகளாக நடக்கிறது.
முதல் போட்டியில் கற்பகம் பல்கலைஅணியும், எஸ்.டி.ஏ.டி., கல்லூரி அணியும் மோதியது. 25:19,25:17 செட் கணக்கில் கற்பகம் அணி 2:0 செட் கணக்கில் வெற்றி பெற்றது.
2வது போட்டியில் போலீஸ் அணியும், லயோலா கல்லூரி அணியும் மோதியதில் 21:25, 13:25 செட் கணக்கில் லயோலா கல்லூரி அணி 2:0 வெற்றி பெற்றது. நேற்று காலையில் நடந்த 3 ம் போட்டியில் சரஸ்வதி தியாகராஜா அணியும், வைஷ்ணவா கல்லூரி அணியும் மோதியது. இதில் 22:25,25:18,25:17 செட் கணக்கில் தியாகராஜா அணி 2:1 செட் கணக்கில் வெற்றி பெற்றது. போலீஸ் அணியும், கற்பகம் பல்கலைஅணியும் மோதியது. 19:25,28:26,25:18 செட் கணக்கில் போலீஸ் அணி 2:1 செட் கணக்கில் வெற்றி பெற்றது. எஸ்.டி.ஏ.டி., அணியும், லயோலா அணியும் மோதியது. 23:25,20:20:25 செட் கணக்கில் லயோலா அணி 2:0 செட் கணக்கில் இரண்டாம் முறையாக வெற்றியை ருசித்தது. போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று இறுதி போட்டி நடக்கிறது.-