தொடக்கக் கல்வி அலுவலகம் முன் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆண்டிபட்டி தொடக்கக் கல்வி அலுவலகம் முன் டிட்டோஜாக் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் சரவணமுத்து தலைமை வகித்தார்.
ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலாளர் ராஜவேல், மாநில வெளியீட்டு செயலாளர் பெரியசாமி முன்னிலை வகித்தனர்.
ஆசிரியைகளின் பதவி உயர்வை பறிக்கும் மாநில முன்னுரிமை அரசாணை 243ஐ ரத்து செய்யவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை 2006 முதல் கொண்டுவர வலியுறுத்துவது உட்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆண்டிபட்டி வட்டார அளவிலான தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.