சுற்றுலா விடுதிகளை பதிவு செய்ய அறிவுறுத்தல்
தேனி, ஜன. 19: சுற்றுலாவிற்கான விடுதிகளை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சிவகங்கை மாட்டத்தில் தமிழக அரசு சுற்றுலாத் துறை சார்பில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்திடும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் உணவுடன் கூடிய தங்கும் விடுதி மற்றும் வீட்டில் தங்கும் விடுதி, சாகச சுற்றுலா நடத்துபவர்கள் போன்ற சுற்றுலா தொழில் முனைவோர் தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி http:tntourismtours.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அங்கீகக்கப்பட்டதும் பதிவுச் சான்றிதழை இணைய தளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.