Saturday, May 3, 2025
மாவட்ட செய்திகள்

வீரபாண்டி திருவிழாவில் எல்லை பிரச்னையால் பக்தர்கள் பாதிப்பு

வீரபாண்டி திருவிழாவில் எல்லை பிரச்னையால் பக்தர்கள் பாதிப்பு பைபாஸ் முதல் பாலம் வரை விளக்குகள் அவசியம்..

வீரபாண்டி சித்திரை திருவிழா நாட்களில் பேரூராட்சி, ஊராட்சி எல்லை பிரச்னையால் பக்தர்கள் இருளில் தவிக்கின்றனர்.

எல்லைகளை கருதாமல் பக்தர்களுக்கு விளக்கு வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி உள்ளனர்.வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.

இரவில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இத் திருவிழாவின் போது முல்லைப்பெரியாற்றிற்கு தெற்கு பகுதியில் அமைக்கப்படும் கடைகளுக்கு வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகம், கோயில் நிர்வாகம் சார்பில் வாடகை வசூலிக்கப்படுகிறது.

ஆனால், கண்ணீஸ்வர முடையார் கோயில் ஆற்றுப்பாலத்தில் இருந்து முத்துததேவன்பட்டி பிரிவு அமைக்கப்படும் கடைகளுக்கு யார் கட்டணம் வசூலிப்பது என பல ஆண்டுகளாக வீரபாண்டி பேரூராட்சிக்கும், உப்புக்கோட்டை ஊராட்சி இடையே பிரச்னை உள்ளது. இப்பிரச்னையில் தனிநபர்கள் அடியாட்களுடன் வந்து மிரட்டி வசூலிப்பது தொடர்கிறது.

இந்த எல்லை பிரச்னையால் குறிப்பிட்ட பகுதியில் மின் விளக்குகள் அமைக்கப்படுவதில்லை. இரவில் இவ்வழியாக திருவிழாவிற்கு வரும் பெண்களை கேலி, கிண்டல் செய்வதில் பிரச்னை ஏற்படுகிறது. போலீசார் சிசிடிவி கேமரா பொருத்தினாலும் போதிய வெளிச்சம் இல்லாததால் குற்ற சம்பவங்களை கண்காணிக்க முடிவதில்லை.

கோயில் நிர்வாகம் இப்பகுதியில் மின் விளக்கு வசதி ஏற்படுத்திடவும், போலீஸ் கண்காணிப்பு கோபுரம் அமைக்கவும், அனுமதியின்றி கட்டணம் வசூலிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *