தபால் அலுவலகங்களில்தேசிய கொடி விற்பனை
நாட்டின் 77 ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, ‛இல்லந்தோறும் மூவர்ணக் கொடி 2024′ என்ற திட்டத்தின் கீழ் ஆக., 1 முதல் தேசியக் கொடி விற்பனை தபால் அலுவலகங்களில் துவங்கி உள்ளன.
தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் குமரன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆக., 15 இந்திய நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து இல்லங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்ற பிரதமர் மோடியின் வேண்டுகோளின் படி அனைத்து தபால் அலுவலகங்களிலும் தேசியக் கொடி விற்பனை நடந்து வருகிறது. ஒரு தேசியக் கொடி ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொது மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள தபால் அலுவலகங்களுக்கு சென்று, தேசிய கொடி வாங்கிக் கொள்ளலாம். ஆன்லைன் மூலம் வாங்க விரும்பும் பொது மக்கள் http://www.epostoffice.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து தபால்காரர் மூலம் வீட்டிலேயே பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.