உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
தேனி: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்போருக்கு அரசு உதவித்தொகை வழங்குகிறது. பத்தாம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி அதற்கு மேல் படித்தவர்களுக்கு உதவித்தொகைவழங்கப்படுகிறது. விண்ணப்பிப்பவர்கள் தனியார் நிறுவனம், சுயதொழில் செய்பவராக இருக்க கூடாது.
விருப்பமுள்ளவர்கள் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்