கிணற்றில் மிதந்த குழந்தை உடல்
வேலுார் : வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஒதியத்துார் பஞ்., ராஜாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கோதண்டபாணி, 50. இவருக்கு சொந்தமான விவசாய
நிலத்தின் வழியாக சிலர் நடந்து சென்றனர். அங்குள்ள, 40 அடி ஆழ கிணற்றில், பிறந்து, 2 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை சடலமாக மிதந்தது. பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடம் சென்று குழந்தையின் உடலை மீட்டு, குழந்தையை கிணற்றில் வீசி சென்றவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.