Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

தேனியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: நாளை மறுநாள் நடக்கிறது

தேனி, ஜன. 22: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 24ம்தேதி (நாளை மறுதினம்) விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை மறுதினம் (24ம்தேதி) காலை 11 மணி அளவில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறையால் சமீபத்திய வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட உள்ளது.

எனவே, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகள் சம்பந்தமான திட்டங்கள் குறித்த கோரிக்கைகளை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டரிடம் மனுக்களாக அளிக்கலாம். விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி அதன்மீது தனிகவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *