ஊஞ்சாம்பட்டி 2வது வார்டில் அடிப்படை வசதி இன்றி சிரமம் குப்பையை எரிப்பதால் வெளிவரும் புகையால் மூச்சுத்திணறல்
தேனி : தேனி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி ஊராட்சி 2வது வார்டில் சேகரிக்கப்படும் குப்பை மயானம் அருகே கொட்டி எரிப்பதால் அப் பகுதியில் உள்ள முதியோர், குழந்தைகள் மூச்சு திணறலால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குண்டும் குழியுமான மண் ரோடு, தெருநாய்கள் தொல்லையால் மக்கள் அச்சடைந்துள்ளனர்.
தேனி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் 2வது வார்டில் வடக்குத்தெரு, பாலாஜி நகர், தொட்டராயர் கோயில் தெரு, மற்றும் விரிவாக்கப் பகுதிகள் அமைந்துள்ளன.
பாலாஜி நகர், அதன் எதிரே உள்ள தெருக்கள், கார்மென்ட் கம்பெனிஉள்ள பகுதிகளில் தார்ரோடு வசதி இன்றி மண் ரோடு குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது.
குப்பையால் சுகாதாரக்கேடு
தொட்டராயர் கோயில் செல்லும் ரோட்டில் டிரான்ஸ்பார்மர் அருகே குப்பை அகற்றாததால் அதிகளவில் குவிந்துள்ளது.
இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு ஏற்பட்டுகிறது. இந்த ரோட்டில் செல்வோர்கள்துர்நாற்றத்தால் முகம் சுழித்து செல்கின்றனர்.
பாலாஜி நகர், தொட்ட ராயர்கோயில், வடக்கு தெரு பகுதிகளில் ஒரு சில இடங்களில் தெரு விளக்குகள் இல்லாததால் அப்பகுதிஇருளில் மூழ்குகிறது.
மறுபுறம் தொட்டராயர் கோயில் ரோட்டிலும் அதனை ஒட்டிய அடுத்த ரோட்டில் மின் கம்பத்திலும் தெருவிளக்கு பகலில் எரிந்த நிலையில் உள்ளது.
புகையால் மூச்சுத்திணறல்
ரியாஸ்தீன், பாலாஜி நகர், ஊஞ்சாம்பட்டி பாலாஜிநகரில் மயானம் அருகே ஊராட்சியில் சேகரிக்கப்படும்குப்பையை இங்கு கொட்டி எரிக்கப்படுகின்றன. அதிலிருந்து வரும் புகையால் அங்கு வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
இதனால் ஊராட்சி குப்பை கொட்டும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.
இதனை தவிர்க்க ஊராட்சி நிர்வாகம் கருத்தடை ஆப்பரேஷன் செய்ய
கால்நடைதுறைக்கு பரிந்துரைக்க வேண்டும்.
பகலில் எரியும் தெருவிளக்குகள்
பொன்ராம், ஊஞ்சாம்பட்டி: பாலாஜி நகரில் தெருவிளக்கு வசதி செய்து தரக்கோரி பல மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. சில பகுதியில் பகலிலும் தெரு விளக்குகள் எரிவது தெடர்கிறது.
இதனால் ஊராட்சிக்கு நிதி இழப்பு தொடர்கிறது. முட்டுகொம்பு ஓடையின் துணை நீரோடைகளான வரத்து வாய்க்கால்களில் முட்செடிகள் முளைத்து ஆக்கிரமித்துள்ளன. புதர் செடிகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.