அலைபேசி டவர்களில் கோளாறு சரி செய்யப்படும் : எம்.பி ., தகவல்
மூணாறு, : இடுக்கி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அலைபேசி டவர்களில் தொழில்நுட்ப கோளாறு ஒன்றரை மாதத்திற்குள் சரி செய்யப்பட்டு, அவை பயன்பாட்டுக்கு வரும் என எம்.பி. டீன்குரியாகோஸ் தெரிவித்தார்.
இடுக்கி மாவட்டத்தில் மத்திய அரசின் யூ.எஸ்.ஓ.எப்., நிதியை கொண்டு பல்வேறு பகுதிகளில் பி.எஸ். என்.எல். சார்பில் 90 அலைபேசி டவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அவை பயன்பாட்டுக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால், அது குறித்து இடுக்கி எம்.பி. டீன்குரியா கோஸ் கூறியதாவது., மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் 90 அலைபேசி டவர்களில் 66 டவர்களின் பணிகள் நிறைவு பெற்றது.
அதில் 33 டவர்களில் பேண்ட் வித்ஸ்பெக்ட்ரம் 700 மெகா ஹெர்ட்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதால், அவற்றில் புதிய தொழில்நுட்பம் கொண்ட அலைபேசிகள் மட்டும் பயன்படுத்த இயலும் என தெரியவந்தது.
அவற்றில் அனைத்து அலைபேசிகளும் பயன்படுத்தும் வகையில் தொழில்நுட்பம் மாற்றி அமைக்க வேண்டும்.
அதற்கு நிதி தேவை என்பதால், அதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தி செய்து ஒன்றரை மாதத்திற்குள் அனைத்து அலைபேசி டவர்களும் பயன்பாட்டுக்கு வரும், என்றார்.
அப்போது முன்னாள் எம்.எம்.ஏ. மணி, காங்., மாவட்ட பொது செயலாளர் முனியாண்டி, மூணாறு பகுதி தலைவர் நெல்சன் ஆகியோர் உடனிருந்தனர்.
.