வேன் மோதி மூதாட்டி பலி
நத்தம், ஜன. 23: மதுரை மாவட்டம், கேசம்பட்டியை சேர்ந்தவர் ராக்காயி (60). பூ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் வியாபாரம் முடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் சமுத்திராபட்டி வந்த அவர் ஊருக்கு செல்வதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு சாலையை கடந்து சென்றார். அப்போது ராஜக்காபட்டியை சேர்ந்த ஜெகந்நாதன் என்பவர் ஓட்டி வந்த மினி வேன் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராக்காயி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.