Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

உயர்கல்வியில் சேர்ந்ததை உறுதி செய்ய அறிவுறுத்தல்

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளதை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் தலைமைஆசிரியர்களுக்கு வலியுறுத்தினார்.

கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் கூட்டம் நடந்தது.

சி.இ.ஓ., இந்திராணி, டி.இ.ஓ., வசந்தா முன்னிலை வகித்தனர். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அதே போல் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பிளஸ் 1 அல்லது தொழிற்பயிற்சிகளில் சேர்ந்துள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்கள் உயர்கல்வி தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்தாண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும். என வலியுறுத்தப்பட்டது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *