விதி மீறிய 35 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தேனி : தேனி தொழிலாளர் அமலாக்கப்பிரிவு உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் ஷங்கர் தலைமையில் தேனி, கம்பம், பெரியகுளம், போடி பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 52 நிறுவனங்களில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில் தேசிய பண்டிகை விடுமுறை தினமான ஜன.26ல் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா, மாற்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விதிமுறைகளை பின்பற்றாத 35 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.