வலு துாக்கும் போட்டி: போடி மாணவர்கள் சாதனை
போடி : மாநில அளவில் நடந்த வலு தூக்கும் போட்டியில் போடி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.
மாநில வலு தூக்கும் போட்டி சங்கரன் கோயிலில் சங்கத் தலைவர் ராஜா தலைமையில் நடந்தது. போட்டியில் 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள கலந்து கொண்டனர்.
இதில் போடி நீலமேகம் பிள்ளை அகடாமியை சேர்ந்த மாணவர்கள் முதலிடமும், சிறந்த குட் லிப்டர் விருதையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பெண்களுக்கான சப் ஜூனியர் 71 கிலோ எடை பிரிவில் போடி பங்கஜம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி விஷாலி முதலிடம் பெற்றார்.
83 கிலோ எடை பிரிவில் போடி ஜ.கா.நி., மேல் நிலைப் பள்ளி மாணவி தங்கேஸ்வரி 2 ம் இடமும், 64 கிலோ எடை பிரிவில் சில்லமரத்துப் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி துர்கைவேணி 2 ம் இடமும், 61 கிலோ எடை பிரிவில் பாண்டிமீனா 3 ம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பெண்களுக்கான சீனியர் 95 கிலோ எடை பிரிவில் கற்பக பிரபா 3 ம் இடம் பெற்றார்.
ஆண்களுக்கான 43 கிலோ எடை பிரிவில் தேனி மேரி மாதா மெட்ரிக்மேல் நிலைப்பள்ளி மாணவர் யாதீஷ்குமார், 45 கிலோ எடை பிரிவில் போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கோபிநாத், 51 கிலோ எடை பிரிவில் கோகுல்பாலன், 50 கிலோ எடை பிரிவில் போடி ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜீவா ஹரிஹரன், 65 கிலோ எடை பிரிவில் ரோகித் குமார், 63 கிலோ எடை பிரிவில் அருண் பாண்டியன், 55 கிலோ எடை பிரிவில் போடி சவுடாம்பிகா நடுநிலைப்பள்ளி மாணவர் கவிபாரதி, 57 கிலோ எடை பிரிவில் தேனி வேலம்மாள் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர் ஜெய்தீப், 79 கிலோ எடை பிரிவில் போடி 7 வது வார்டு நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் நாவலன் ஆகியோர் ‘குட் லிப்டர்’ ஆக தேர்வு பெற்று உள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தேனி மாவட்ட வலு தூக்கும் சங்க தலைவர் குமார், செயலாளர் நீலமேகம், மாஸ்டர்கள் சொக்கர் மீனா, தீபன் சக்கரவர்த்தி, மோனீஸ்வர், வாஞ்சிநாதன், பெஸ்கி ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.