கறவை மாடு வளர்ப்பு இலவசப் பயிற்சி
தேனி: தேனி உழவர் பயிற்சி மையத்தில் நாளை(ஜன.,29) காலை 10:00 மணிக்கு கறவை மாடு வளர்ப்பு பற்றி இலவசப் பயிற்சி வகுப்பு நடக்கிறது. விருப்ப உள்ள விவசாயிகள், இளைஞர்கள், கால்நடை வளர்ப்போர் பங்கேற்று பயன்பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு மதுரை ரோட்டில் சார்நிலைக் கருவூலம் எதிரே அமைந்துள்ள உழவர் பயிற்சி மையத்தை நேரடியாகவோ அல்லது 98650 16174 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய தலைவர் விமல்ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.