மளிகைக் கடைக்காரர் மீது தாக்குதல்
போடி, மார்ச் 21: போடி சுந்தர பாண்டியன் தெருவை சேர்ந்த சவுந்தரபாண்டியன் (32). இவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் போடி வினோபாஜி தெருவை சேர்ந்த ஆனந்த் மகன் தினேஷ் குமார்(22) வேலை பார்த்தார். அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால் சவுந்தரபாண்டியன் அவரை வேலையிலிருந்து நிறுத்தினார். இந்த நிலையில், நேற்று முன் தினம் மாலை வினோபாஜி தெருவில் சவுந்தரபாண்டியன் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது தினேஷ் குமார் அவரை வழிமறித்து அவதூறாக பேசி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்த சவுந்தரபாண்டியன் அளித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.