Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

தி.மு.க., அலுவலகத்தில் 3 லேப்டாப்கள் திருட்டு

தேனி:தேனி தி.மு.க., நகர் செயலராக நாராயணபாண்டியன், 48, உள்ளார். என்.ஆர்.டி., நகரில் ஒரு வீட்டின் முதல் மாடியில் நகர தி.மு.க., அலுவலகம் செயல்படுகிறது.

இங்கு நேற்றிரவு புகுந்த மர்ம நபர்கள் கீழ்தளத்தில் உள்ள நுழைவாயில் கதவு, மேல்மாடியில் உள்ள இரண்டு கதவுகளை கம்பியால் உடைத்தனர். பின் அறையில் இருந்த, தலா, 40,000 ரூபாய் மதிப்புள்ள, மூன்று லேப்டாப்களை திருடி சென்றனர்.

இதுகுறித்து நகர் செயலர் போலீசில் புகார் அளித்தார். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி மற்றும் போலீசார், இதில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *