டிப்பர் லாரியில் எம். சாண்டு கடத்தல்
தேனி, ஜன.30: பெரியகுளம் சப்.கலெக்டர் ரஜத்பீடன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று காலை பெரியகுளம் அருகே ஜல்லிப்பட்டியில், திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கேரள மாநில பதிவெண் கொண்ட ஒரு டிப்பர் லாரியை மறித்து சோதனையிட்டபோது, எம்.சாண்டு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது போன்ற போலியான அனுமதி சீட்டுடன் மணல் கடத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து தாமரைக்குளம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில் பெரியகுளம் தென்கரை போலீசார் எம்.சாண்டை கடத்திய கேரள பதிவெண் கொண்ட லாரியை ஓட்டி வந்த டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.