தேரோட்ட வீதிகளை சீரமைக்க பா.ஜ., மனு
தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ.,தேனி நகரத்தலைவர் ரவிக்குமார் தலைமையில் நிர்வாகிகள் வழங்கிய மனுவில், தேனியில் பிப்.,2ல் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவுகின்றன. இது கலாச்சாரத்தை சீரழிக்கும் நிகழ்ச்சியாகும்.
இதனால் இளைய தலைமுறையினர் தடம் மாற வாய்ப்புள்ளது. இந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என இருந்தது. மற்றொரு மனுவில் உத்தமபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட திருக்காளகத்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் மார்ச் 12ல் நடக்கிறது. அதற்கு முன்னதாக கோவிலை சுற்றி குண்டும் குழியுமாக உள்ள வீதிகளை சீரமைக்க வேண்டும் என கோரினர்.நிர்வாகிகள் பெரியசாமி, விஜயகுமார், கார்த்திக்கு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.