போடி அரசு மருத்துவமனையில் ‘டயாலிசிஸ்’ பிரிவு துவக்க முடிவு
போடி: சிறுநீரக பாதிப்புள்ள நோயாளிகள் பயன் பெறும் வகையில் போடி அரசு மருத்துவமனையில் வரும் பிப்.15 க்குள் டயாலிசிஸ் பிரிவு துவங்க முடிவு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.
போடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் ரவீந்திரநாத் கூறுகையில் : சிறுநீரகங்கள் அதிகப் படியான உப்பு, அமிலம், பொட்டாசியத்தை ஒழுங்கு படுத்துகிறது. உடலில் ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியை தூண்டும் ஹார்மோன்கள் சுரப்பதோடு, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றன. வலுவான எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் டி யினை சிறுநீரகங்கள் உற்பத்தி செய்கின்றன. சிறுநீரகம் செயலிழந்த நோயாளியின் ரத்தத்தை செயற்கை முறைகள் சுத்தப்படுத்தும் சிகிச்சை டயாலிசிஸ் ஆகும். டயாலிசிஸ் மேற்கொள்வதன் மூலம் நோயாளிகள் நீண்ட காலம் வாழ உதவுகிறது. போடி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவுக்கு தனி அறை அமைக்கப்பட்டு, அதற்கான கருவிகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. வரும் பிப்.15க்குள் பயன்பாட்டிற்கு வர உள்ளது என்றா