தேனியில் பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்: கல்லுாரி மாணவர் உட்பட நால்வர் கைது
தேனி : தேனியில் 22 வயது பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆட்டோ டிரைவர் அருண் 25, கேட்டரிங் பணிபுரியும் பிரகாஷ் 23, கர்ணன் 24, கல்லுாரி மாணவர் சரவணன் 19 ஆகிய நால்வரை போலீசார் கைது செய்தனர்.
தேனி பழனிசெட்டியை சேர்ந்த 22 வயது பெண் கணவர், குழந்தைகளுடன் வசித்து வந்தார். குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் இருந்து பிப்.28ல் இரவு வெளியேறினார். அப்பகுதி பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தார். ஏற்கனவே அறிமுகமான ஆட்டோ டிரைவர் அருண், டூவீலரில் வந்தார். பெண்ணுக்கு நடந்ததை கேட்டு ஆறுதலாக பேசினார்.
அந்த இடத்திற்கு அருணின் நண்பர் கர்ணன் வந்தார். இருவரும் இணைந்து பெண்ணை மிரட்டி டூவீலரில் ஏற்றினர்.
தொடர்ந்து அல்லி நகரத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு இவர்களின் நண்பர் பிரகாஷ் வந்தார். மூவரும் இணைந்து அப்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர். இந்நிலையில் அங்கு கல்லுாரி 2ம் ஆண்டு மாணவர் சரவணன் வந்தார். பெண்ணை வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி டூவீலரில் அழைத்து சென்றார். மற்றொரு இடத்திற்கு சென்று பெண்ணை மிரட்டி, மீண்டும் பலாத்காரம் செய்து, வீட்டருகில் இறக்கி விட்டார்.
நால்வர் கைது
பாதிக்கப்பட்ட பெண் தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர்கள் மங்கையர் திலகம், ராமலட்சுமி விசாரணை நடத்தி இவ்வழக்கில் கல்லுாரி மாணவர் உட்பட நால்வரையும் கைது செய்தனர்.