Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

டாக்டருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

கம்பம்: கம்பம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் பொன்னரசனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.

இவர் ஓய்வு பெறும் நாளில் தனது சொந்த பணத்தில் நோயாளிகள் உடன் வருபவர்கள் தங்குவதற்கு ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டடம் அரசு மருத்துவமனைக்கு கட்டி கொடுத்துள்ளார். அந்த கட்டடத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,தலைமை வகித்தார். தங்க தமிழ் செல்வன் எம்.பி. புத்தகங்கள் வழங்கினார். இந் நிகழ்ச்சியில் டாக்டர்கள் மோகன சுந்தரம், சையது சுல்தான், கோபாலகிருஷ்ணன், அழகர்சாமி, அபு, ராதாகிருஷ்ணன், பர்வீன், ரிஸ்வானா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கட்சி பிரமுகர்களும், வர்த்தகர்கள் பாராட்டினர். ஏற்பாடுகளை டாக்டர் மனைவி அமுதா மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *