சபரிமலை நடை பிப். 12ல் திறப்பு
தேனி,:சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் மகரஜோதி தரிசனம் நிறைவடைந்து ஜன.20ல் நடை அடைக்கப்பட்டது. மாசி மாதாந்திர பூஜை பிப்.12ல் நடை திறக்கப்படுகிறது. பிப். 17 வரை திறந்திருக்கும்
இந்த நாட்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு துவங்கி உள்ளது. பக்தர்கள் sabrimalaonline.org என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.