தேனியில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த தடை
தேனி; தேனியில் பிப்.2ல் நடக்க இருந்த ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடத்த தடை விதித்து எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார். விநாயகா டிரைவிங் பயிற்சி பள்ளி நிர்வாகம், தேனி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன் ஏற்பாட்டில் பிப்.2ல் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடக்க இருந்தது.
இந்நிகழ்ச்சி நாளில் ஆம்புலன்ஸ், பொது போக்குவரத்தைதேவையின்றி மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம், அரண்மனைப்புதுார் ரயில்வேகேட் பகுதி 5 மணி நேரத்திற்கு மேலாக அடைக்க முடியாத நிலை போன்ற காரணங்களால் இந்நிகழ்ச்சிநடத்த எதிர்ப்பு கிளம்பியது.
மேலும் பா.ஜ., ஹிந்து முன்னணி சார்பில் தமிழர் பண்பாடு கெட்டுவிடும் என மனு அளித்திருந்தனர். மேலும் அரசு துறைகளில் தடையில்லாசான்றிதழ்கள் பெற விண்ணப்பிக்காமல் கோரிக்கை மட்டுமே வைத்திருந்தனர்.
இதனால் நிகழ்ச்சி நடத்துவதில் உள்ள சாதக பாதகங்களை ஆய்வு செய்ய கூடுதல் ஏ.எஸ்.பி.,கேல்கர் சுப்ரமண்யபாலசந்திராவுக்கு எஸ்.பி. உத்தரவிட்டார்.
ஆய்வு செய்து நிகழ்ச்சி நடந்தால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை அறிக்கை சமர்ப்பித்தார். அதனடிப்படையில் எஸ்.பி., நிகழ்ச்சியை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சி குறித்து அனுமதி இன்றி பிளக்ஸ் போர்டு’வைத்த நபர்கள் மீதுநடவடிக்கை எடுக்க போலீசாருக்குஅறிவுறுத்தியுள்ளார்.