பட்டாசு வெடித்தவருக்கு அபராதம்
கூடலூர், டிச. 10: கூடலூர் நகராட்சியில் விஷேசங்களின்போது பட்டாசு வெடிக்க தடை விதித்து நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று கூடலூர் பகுதியில் தனியார் மண்டபத்தில் நடந்த விஷேசத்திற்கு பட்டாசு வெடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கூடலூர் நகராட்சியினர் மண்டபத்திற்கு சென்று, அதன் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், இது போன்ற விதிமீறலில் ஈடுபட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர்.