மாற்றுத் திறனாளிகள் கம்பத்தில் ஆர்ப்பாட்டம்
கம்பம்; கம்பம் வட்டார முல்லை மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கம்பம் வ.உ.சி. திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மாற்றுத் திறனாளி நலவாரிய உறுப்பினர் கருப்பையா தலைமை வகித்தார். நகர் செயலாளர் காமேஷ்வரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் மணிகண்டன், துணை தலைவர் சிவராஜ்குமார் வரவேற்றனர்
ரேஷன் கடைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கிய 35 கிலோ ரேஷன் அரிசியை 12 கிலோவாக குறைத்ததை கண்டித்தும், கம்பம் அரசு மருத்துவமனையில் ஆவின்பால் பூத் அமைக்க அனுமதிக்க வேண்டியும், ஆந்திர அரசு போல உதவி தொகையை ரூ. 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கவும், காத்திருப்போர் பட்டியலில் உள்ளர்வர்களுக்கு உடனே உதவி தொகையை வழங்கவும், வங்கிகள், அரசு மருத்துவமனையில் சாய்வு தள பாதை அமைக்கவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கம்பம் வட்டார மாற்றுத் திறனாளிகள் திரளாக பங்கேற்றனர்.